தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது


UPDATED : நவ 18, 2026 05:09 PM

ADDED : நவ 18, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 05:09 PM ADDED : நவ 18, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:


கடலுார் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இம்மாதம் வரும், 20ம் தேதி, எண்: 8, ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையத்தில் உள்ள கடலுார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டம் படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us