தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/15ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

15ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

15ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : மே 13, 2026 03:30 PM

ADDED : மே 13, 2026 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 03:30 PM ADDED : மே 13, 2026 03:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும், 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 10:00 மணி முதல் மதியம், 01:00 மணி வரை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.

இதில் கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டதாரிகள், பொறியியல், பட்டயபடிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் என, அனைத்து கல்வி தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை, நேரிலோ அல்லது, 04343 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ, தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us