UPDATED : பிப் 14, 2025 12:00 AM
ADDED : பிப் 14, 2025 09:12 AM
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில், மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன் பெயரில் அமைக்கப்பட்ட, பேராசிரியர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தி.மு.க., பொதுச்செயலர், கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தவர் க.அன்பழகன். அவரது நினைவாக, சென்னை, வளசரவாக்கம், மதுரை மீனாட்சி நகர் செல்வா தெருவில், டாக்டர் மணமல்லி அன்பழகன் அறக்கட்டளை சார்பில், பேராசிரியர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது.
அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வரவேற்றார். வில்லிவாக்கம் எம்.எல்.ஏ., வெற்றி அழகன் முன்னிலை வகித்தார்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, எம்.எல்.ஏ.,க்கள் பிரபாகரராஜா, கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.