UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 10:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனரங்கள், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்கள், பள்ளிகளில் அமைச்சு பணியாளர்களாக இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. அதில் முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி தமிழகம் முழுதும் தற்போது உதவியாளராக இருந்த, 53 பேருக்கு கண்காணிப்பாளர்களாக நேற்று பதவி உயர்வு வழங்கப்பட்டது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடந்த கலந்தாய்வில், பதவி உயர்வு பெற்றோர், விருப்ப பணி இடங்களை தேர்வு செய்தனர்.