பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு; பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு
பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு; பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு
UPDATED : அக் 30, 2024 12:00 AM
ADDED : அக் 30, 2024 12:55 PM
சேலம்:
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுநிலை ஆசிரியர்களும், 6 முதல், 10ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களும் பாடம் நடத்துகின்றனர்.
ஜன., 1 நிலவரப்படி, காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்ப, முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு மாவட்ட வாரியாக பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், துணை ஆய்வர்கள் விபரங்களை அனுப்ப, பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அதில், 2023 டிச., 31க்குள் ஒரே பாடத்தில் இளங்கலை, முதுகலை, பி.எட்., முடித்துள்ள ஆசிரியர் விபரங்கள், பிறந்த நாள், ஒழுங்கு நடவடிக்கை விபரம், சான்றிதழ் நகல்களை இணைத்து, நவ., 22க்குள் நேரில் சமர்ப்பிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.