UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 11:55 AM

நவீன தொழில்நுட்ப அறிவும், பயன்பாடும் இன்று பொறியியல் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி கலை, அறிவியல், வணிகவியல், சட்டம் என அனைத்துத் துறை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கும் அவசியமாகிறது.
ஜென் ஏ.ஐ., கொள்கை
புதிய தொழில்நுட்பங்களை ஒழுக்கநெறியுடன் முறையாக பயன்படுத்தினால் வெற்றி இலக்கை எளிதாக அடைய முடியும். ஆகவேதான், சாட்ஜி.பி.டி.,யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளைக் கொண்டு, 'பல்கலைக்கழக ஜென் ஏ.ஐ.,' கொள்கையை வகுத்துள்ளோம். அதன்படி, அவரவர் பொறுப்புகளை உணர்ந்தும், நெறிமுறைகளுடனும் சாட்ஜி.பி.டி.,யை பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிற்சிகளை எங்கள் கல்வி நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் அளிக்கிறோம்.
மேலும், அனைத்து துறை மாணவர்களுக்கும் 'டேட்டா'க்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், டிஜிட்டல் புட்பிரிண்ட் மற்றும் டீப் லேர்னிங் குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்குகிறோம். துறை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் ஆகியோர்களால் மூன்று கட்டமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
செயல்முறை அனுபவக் கல்வி
தொழில் நிறுவனங்களில் பின்பற்றப்படும் நவீன சாரசாம்சங்களை அடிப்படையாகக் கொண்டும், சமீபத்திய மாற்றத்திற்கு ஏற்பவும் பாடத்திட்டத்தை அனுபவ ரீதியாக செயல்முறையில் கற்றுத் தருகிறோம். சமூக மற்றும் துறை சார்ந்த மாற்றத்திற்கும், தேவைக்கும் ஏற்ப மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை பின்பற்றுகிறோம். இவைதவிர, நிலையான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை புகட்டும் வகையிலும் சிறப்பு பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பரிந்துரைந்துள்ள நிலைத்தன்மை வளர்ச்சி இலக்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படவும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறோம். இதனால், நாடு முழுவதிலும் இருந்து 27 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு ஆர்வமுடன் கல்வி பயிலுகின்றனர்.
எளிதாகும் வேலை வாய்ப்பு
நெட்வொர்க்கிங் திறன், மெட்டா திறன், கிரிட்டிக்கல் திங்கிங் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மென் திறன்கள் குறித்தும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கிறோம். சமூக ஊடகங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான வரைமுறைகளையும் மிக கவனமாக வகுத்து, அதற்கான முறையான பயற்சிகளை வழங்குகிறோம். இத்தகைய சீரிய முயற்சிகளால், வேலை வாய்ப்பிற்கு என்று பிரத்யேக பயிற்சிக்கான அவசியம் ஏற்படுவதில்லை. கல்லூரி படிப்பை நிறைவு செய்யும்முன்பே சிறந்த வேலை வாய்ப்பையும் பெறுகின்றனர்.
-டாக்டர் என்.நாராயணி ராமச்சந்திரன், இயக்குனர், என்.எம்.ஐ.எம்.எஸ்., பெங்களூரு.
narayani.ramachandran@nmims.edu