தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., அலுவலகம் முற்றுகை; மாணவர்களை விரட்டி பிடித்த போலீஸ்

சி.பி.எஸ்.இ., அலுவலகம் முற்றுகை; மாணவர்களை விரட்டி பிடித்த போலீஸ்

சி.பி.எஸ்.இ., அலுவலகம் முற்றுகை; மாணவர்களை விரட்டி பிடித்த போலீஸ்


UPDATED : ஜூன் 09, 2026 05:19 PM

ADDED : ஜூன் 09, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 05:19 PM ADDED : ஜூன் 09, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், 'நீட்' தேர்வு மற்றும் பொதுத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம்சாட்டி, சி.பி.எஸ்.இ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் அமைப்பினரை, போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

நீட் தேர்வு, பிளஸ் 2 தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து இந்திய மாணவர் சங்கத்தினர், அண்ணா நகரில் உள்ள சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் குறித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், மாணவர்கள் கோஷமிட்டனர்.

இதையடுத்து, சி.பி.எஸ்.இ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை, போலீசார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், அங்கிருந்து வெளியேறிய மாணவர்களை, போலீசார் விரட்டி சென்று, குண்டுக்கட்டாக கைது செய்து, வாகனங்களில் அழைத்து சென்றனர். பின், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.

இது குறித்து, மாணவர் சங்க செயலர் தினேஷ் கூறியதாவது:


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள், ஓ.எம்.எஸ்., எனும் செயலி வாயிலாக திருத்தப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்த மாதம் நடந்த, 'நீட்' தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 40 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us