தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்


UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM

ADDED : ஜூலை 30, 2024 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM ADDED : ஜூலை 30, 2024 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் கால்நடை டாக்டர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி, கால்நடை டாக்டர்கள் நலன் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அன்னை தெரேசா மக்கள் சேவை இயக்கம் ஆகியன இணைந்து, வில்லியனுார், ஒதியம்பட்டு, ஜிப்ஸி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஸ்கூல் பேக் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி கால்நடை டாக்டர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் செல்வமுத்து தலைமை தாங்கினார். அன்னை தெரேசா மக்கள் சேவை இயக்க செயலாளர் செல்வ பாண்டியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல், கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு, ஸ்கூல் பேக் மற்றும் மாலை சிற்றுண்டி வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயக்க நிர்வாகிகள் வெங்கடேசன், ஆதித்தன், குமரன் சிரஞ்சீவி ஆகியோர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us