UPDATED : டிச 03, 2024 12:00 AM
ADDED : டிச 03, 2024 09:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்:
முதுகுளத்துார் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேற்பார்வையாளர் மோகனவள்ளி தலைமை வகித்தார். மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் லியோன் முன்னிலை வகித்தார். பயிற்சி புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடத்திற்கு முன் மதிப்பு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் முன் மதிப்பீடு செய்ய வேண்டும்.
அனைத்து பாடத்திலும் மாணவர்களின் கற்றல் நிலைகள் கவனிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட மாணவர்களின் கற்றல் நிலைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.