UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM
ADDED : ஜூலை 01, 2024 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :
மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர்., ரோட்டில் உள்ள ஸ்ரீமந் நாயகி வேத பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை இயக்குநர் ராமசுப்பிர மணியன் இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
20 மாணவர்களை கொண்ட இப்பாடசாலையில் தினமும் மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை ரிக் வேத பயிற்சியை ராமாச்சாரியா வழங்குகிறார். இவ்விழாவில் நிர்வாகிகள் பிரகாஷ் குமார் திம்மா, ராமாச்சாரி, குப்புசாமி, விஜயகுமார், பிரேம்குமார், ஆனந்த் பாபு, ஸ்ரீனிவாசன், நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.