எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு உத்தேச ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு உத்தேச ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு
UPDATED : நவ 13, 2026 01:48 PM
ADDED : நவ 13, 2026 01:49 PM
புதுச்சேரி:
சென்டாக் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு ஸ்டிரே சுற்றுக்கான மேலாண்மை ஒதுக்கீட்டுப் பட்டியல் மற்றும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான உத்தேச ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு, மேலாண்மை ஒதுக்கீட்டுக்கான தகுதியான மாணவர்களின் திருத்தப்பட்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறப்பு ஸ்டிரே சுற்றின் உத்தேச ஒதுக்கீட்டுப் பட்டியல் சென்டாக்கின் www.centacpuducherry.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் நுகர்வோர் உள்நுழைவுப் பகுதியைப் பயன்படுத்தி ஒதுக்கீட்டு நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதில் ஏதேனும் குறைகள் அல்லது முறையீடுகள் இருப்பின், இன்று 13ம் தேதி காலை 10:00 மணிக்குள் உத்தேச ஒதுக்கீடு குறித்த ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இறுதியான தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும். தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் வெளியானதும், மாணவர்கள் தங்களுக்கான அசல் சான்றிதழ்கள், உரிய கட்டணம் மற்றும் ஒதுக்கீட்டு ஆணையுடன் சம்மந்தப்பட்ட கல்லுாரி முதல்வரை சந்தித்து சேர வேண்டும். கல்லுாரிகளில் சேருவதற்கு வரும் 16ம் தேதி மாலை 5 மணி வரை கடைசி நாளாகும்.
உரிய அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். வெளியிடப்பட்டுள்ள உத்தேசப் பட்டியல் தற்காலிகமானது மட்டுமே என்பதால், மாணவர்கள் இதன் அடிப்படையில் நீதிமன்றத்தையோ அல்லது உரிமையையோ கோர முடியாது. தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் மற்றும் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்படும் அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டு ஆணைக்குப் பின்னரே மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லுாரியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 0413-2655570 மற்றும் 0413-2655571 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
