தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு உளவியல் ஆலோசகர் டிப்ஸ்

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசகர் டிப்ஸ்

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசகர் டிப்ஸ்


UPDATED : பிப் 23, 2026 03:34 PM

ADDED : பிப் 23, 2026 03:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2026 03:34 PM ADDED : பிப் 23, 2026 03:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
“பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், ஆரோக்கியமான உணவு முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்,” என்கிறார்,உளவியல் ஆலோசகர் அருள் வடிவு.

அவர் மேலும் கூறியதாவது:

காலையில் எளிதாக ஜீரணமாகும் இட்லி, உப்புமா, முளைகட்டிய பயிர், மதியம், நார் சத்துக்கள் அடங்கிய காய்கறி, கீரை வகைகள், முட்டை, இரவு இட்லி எடுத்துக் கொள்ளலாம்.

தற்போது டெக்னிக்கல் முறையில் படிக்க, 'SQWRRR' என்ற பார்முலா உள்ளது. சர்வேயிங், கொஸ்டினிங், ரைட்டிங், ரீட், ரீசைட், ரிவ்யூ இதன் சுருக்கம்.

இந்த பார்முலா முறையில் படித்தால், எளிதில் நினைவில் நிற்கும். முதலில் கேள்வி பதிலை உங்களுக்குள்ளே, விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். இதை எல்லாம் படித்து விட்டோம் என சிறிய குறிப்பு எழுதி வைக்க வேண்டும்.

'ரீட்' என்பது, வாய் விட்டு சத்தமாக படிக்கும் போது, மனதில் ஆழமாக பதியும். 'ரீசைட்' என்பது, படித்ததை எழுதி பார்க்க வேண்டும்.

'ரிவ்யூ' என்பது, உங்களுக்குள்ளே சொல்லி பார்க்க வேண்டும். அல்லது மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இம்முறையில் படித்தால், பாடங்கள் மனதில் நன்கு பதியும். இதை 'த்ரீஆர்' டெக்னிக் என கூறுவர்.

மொபைல் போன், லேப்டாப், டிவி ஆகியவற்றை நீண்ட நேரம் பார்ப்பதால், கண் சோர்ந்து விடும். நமக்கு தெரியாமலே நம்மில் ஒரு சோம்பல் ஏற்படும் போது, படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எனவே, தொலைக்காட்சி, மொபைல் போன் பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

நம்மால் இதை சாதிக்க முடியும், படிக்க முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். நேரத்தை கணக்கிட்டு தேர்வு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் பொதுத்தேர்வில் நேர நிர்வாகம்எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us