UPDATED : ஜூலை 14, 2026 05:42 PM
ADDED : ஜூலை 14, 2026 05:44 PM
கள்ளக்குறிச்சி:
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வணிகவியல் துறையில் முனைவர் பட்டத்திற்கான பொது வாய்மொழித் தேர்வு நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த தேர்வுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். வணிகவியல் துறைத் தலைவர் அனந்தராமன் புறத் தேர்வாளரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
பொதுவாய்மொழி ஆய்வு தேர்வுக்கு புற தேர்வாளராக கோயம்புத்துார் பாரதியார் பல்கலைகழகத்தின் வணிகவியல் துறை பேராசிரியர் செல்லசாமி வாய்மொழித் தேர்வினை நடத்தினார்.
முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரத்தீஷ் தனது ஆய்வு குறித்து சுருக்கமாக பேசி, புறத்தேர்வாளர் கேட்ட கேள்விகளுக்கு பதல் அளித்தார்.
இறுதியில், ரத்தீஷ் முனைவர் பட்டம் பெற தகுதியாளர் என பல்கலைகழகத்திற்கு பரிந்துரைப்பதாக புறத் தேர்வாளர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர் அசோக் நன்றி கூறினார்.
