கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு பட்டியல் வெளியீடு
கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு பட்டியல் வெளியீடு
UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 08:19 AM
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதலாமாண்டில் காலியாக உள்ள கலை, அறிவியல் படிப்புகளுக்கு இதுவரை சென்டாக் மூன்று கட்ட கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்பியுள்ளது.
அடுத்து நான்காம் கட்ட கலந்தாய்வு நடத்த பி.டெக்., தவிர்த்த பி.எஸ்சி., அக்ரி, கால்நடை மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., பி.எஸ்சி., பாரமெடிக்கல் படிப்புகள், பி.பார்ம், பி.ஏ. எல்.எல்.பி., டிப்ளமோ பாரா மெடிக்கல் படிப்புகள், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட கலை, அறிவியல் படிப்புகளுக்கு கடந்த 19ம் தேதி வரை கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு நான்காம் கட்ட கலந்தாய்வுக்கான கவுன்சிலிங் முன்னுரிமை மாணவர்களின் வரைவு பட்டியலை சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.