இளநிலை மருத்துவ படிப்பு 2-ம் சுற்றுக்கான தகுதி பட்டியல் வெளியீடு
இளநிலை மருத்துவ படிப்பு 2-ம் சுற்றுக்கான தகுதி பட்டியல் வெளியீடு
UPDATED : செப் 24, 2025 08:23 AM
ADDED : செப் 24, 2025 08:24 AM
புதுச்சேரி :
புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மருத்துவ கலந்தாய்வை நடத்தி வருகிறது.
முதல் சுற்று கலந்தாய்வு முடிந்தநிலையில், 2-ம் சுற்று கலந்தாய்விற்கான பதிவு மற்றும் விருப்ப பாட தேர்வு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் 2-ம் சுற்று கலந்தாய்விற்கான திருத்தப்பட்ட தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் (அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு வாரியாக) சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோல் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான மாப்-அப் கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்களின் தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் சேர்க்கை ஆணையை பதிவிறக்கம் செய்து கொண்டு, அசல் சான்றிதழ்களுடன் நாளை மறுநாள் 24 தேதிமாலை 5 மணிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்.
இதனை புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.