UPDATED : ஜூலை 30, 2025 12:00 AM
ADDED : ஜூலை 30, 2025 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:
சேலம், பெரியார் பல்கலையில் மறுதிருத்தம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
சேலம், பெரியார் பல்கலை நிர்வாகக் குழு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பெரியார் பல்கலை இணைவு பெற்ற கல்லுாரிகளில், பயின்று வரும் மாணவர்களின் ஏப், மே- 2025 பருவத்தேர்வுகளின் மதிப்பெண்கள் தொடர்பாக, மறுதிருத்தம் கோரி விண்ணப்பம் செய்யப்பட்ட தாள்களுக்குரிய தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் கல்லுாரி முதல்வர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்கள், கல்லுாரி முதல்வர்களை அணுகி தேர்வு முடிவு விபரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.