sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சர்வதேச தரத்தில் அனந்தபூர் சாஹிப்பில் பல்கலை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

/

சர்வதேச தரத்தில் அனந்தபூர் சாஹிப்பில் பல்கலை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

சர்வதேச தரத்தில் அனந்தபூர் சாஹிப்பில் பல்கலை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

சர்வதேச தரத்தில் அனந்தபூர் சாஹிப்பில் பல்கலை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு


UPDATED : நவ 26, 2025 09:50 PM

ADDED : நவ 26, 2025 09:51 PM

Google News

UPDATED : நவ 26, 2025 09:50 PM ADDED : நவ 26, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனந்த்பூர் சாஹிப்:
“குரு தேவ் பஹதூர் பெயரில் சர்வதேச தரத்தில் அனந்தபூர் சாஹிப் நகரில் பல்கலை அமைக்கப்படும்,”என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசினார்.

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான, குரு தேவ் பஹதூர் சாஹிப், 350வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அனந்தபூர் சாஹிப்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பகவந்த் மான் பேசியதாவது:


இலவச பஸ்

அமிர்தசரஸில் உள்ள குருத்வாராக்கள், பதிண்டா மாவட்டத்தில் தல்வண்டி சபோ மற்றும் ரூப்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனந்த்பூர் சாஹிப் ஆகிய குருத்வாராக்களுக்குச் செல்ல கட்டணம் இல்லாத மின்சார ரிக்ஷா மற்றும் மினி பஸ்கள் இயக்கப்படும். இதற்கான செலவுகளை பஞ்சாப் அரசே ஏற்கும். அனந்த்பூர் சாஹிப்பில் பாரம்பரிய தெரு அமைக்கப்படும்.

மேலும், அனந்தபூர் சாஹிப் நகரில், சர்வதேச தரத்தில் பல்கலை அமைக்கப்படும். சீக்கியர்களின் ஐந்து புனிதத் தலங்களில் அகல் தக்த் சாஹிப் - அமிர்தசரஸ், தம்தாமா சாஹிப் - தல்வண்டி சபோ, பதிண்டா, தக்த் கேஷ்கர் சாஹிப் - அனந்தபூர் சாஹிப் என மூன்று தலங்கள் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மதுவுக்கு தடை

இந்நிகழ்ச்சியில், டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். ஏராளமான சீக்கியர்கள் அனந்தபூர் சாஹிப்பில் திரண்டு வழிபாடு நடத்தினர்.

பஞ்சாப் சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் சிறப்புக் கூட்டத்தில், அனந்த்பூர் சாஹிப், தல்வண்டி சபோ மற்றும் அமிர்தசரஸ் ஆகியவை புனித நகரங்கள் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இந்த நகரங்களில் இறைச்சி, மதுபானம், புகையிலை மற்றும் பிற போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு தடை செய்யப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us