UPDATED : மார் 26, 2026 06:43 PM
ADDED : மார் 26, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
கெலமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், முகளூர் மற்றும் கொப்பகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஓசூர் வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பொம்மலாட்ட பயிற்சி வகுப்பு மற்றும் பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரமேஷ்குமார், பொம்மலாட்ட பயிற்சி மற்றும் பொம்மைகள் செய்ய கற்றுக் கொடுத்தார். பள்ளி தலைமையாசிரியர்கள் கனகம், கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.
