தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புஷ்பக் ஏவுகலன் சோதனை: இஸ்ரோவுக்கு இந்திய விமானப்படை பாராட்டு

புஷ்பக் ஏவுகலன் சோதனை: இஸ்ரோவுக்கு இந்திய விமானப்படை பாராட்டு

புஷ்பக் ஏவுகலன் சோதனை: இஸ்ரோவுக்கு இந்திய விமானப்படை பாராட்டு


UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM

ADDED : ஜூன் 24, 2024 06:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM ADDED : ஜூன் 24, 2024 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதற்கு, இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது.

விண்வெளியில் செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில், ஆர்.எல்.வி., புஷ்பக் என்ற ராக்கெட்டை ஏற்கனவே இரண்டு முறை இஸ்ரோ சோதனை செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா உள்ள ஏவுத்தளத்தில், இன்று (ஜூன் 23) காலை 7.10 மணிக்கு 3வது முறையாக, சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.

இதன் மூலம், செயற்கை கோள்களையோ அல்லது விண்கலன்களையோ விண்ணுக்கு சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், ஏவுகலன் திட்ட பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது.

இது குறித்து, இந்திய விமானப்படை புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற பல வெற்றிகரமான மைல்கற்களை அடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us