தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.வி.என்., பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

பி.வி.என்., பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

பி.வி.என்., பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை


UPDATED : மே 25, 2026 06:46 PM

ADDED : மே 25, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 06:46 PM ADDED : மே 25, 2026 06:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, பரத் வித்யா நிகேதன் (பி.வி.என்.,) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். பள்ளி மாணவியர் சாம்பவி, மதிவதனி, மதுஸ்ரீ ஆகிய மூவரும், தலா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சாருமகி, 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும்; பிரியங்கா, சுருதிகா ஆகியோர், 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.

மாணவியர் டிமதுஸ்ரீ, அபிஸ்ரீ, பிரவினா ஆகியோர், 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். தேர்வு எழுதிய, 79 மாணவர்களும் நன்மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இரண்டாமிடமும், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவியர் மூவரையும், தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியரையும் பள்ளியின் தாளாளர் சாந்தி ஆனந்த், பள்ளி முதல்வர் சந்தோஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us