சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை; 100ல் இந்தியாவுக்கு 4 இடங்கள்!
சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை; 100ல் இந்தியாவுக்கு 4 இடங்கள்!
UPDATED : செப் 30, 2024 12:00 AM
ADDED : செப் 30, 2024 12:08 PM

2025ம் ஆண்டிற்கான க்யு.எஸ்., குளோபல் எம்.பி.ஏ., தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
நாட்டின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமாக கருதப்படும் ஐ.ஐ.எம்., (3 நிறுவனங்கள்) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஐ.ஐ.எம்.,- பெங்களூர், ஐ.ஐ.எம்.,- அகமதாபாத் மற்றும் ஐ.ஐ.எம்.,- கல்கத்தா ஆகிய அந்த மூன்று ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்த நிலையில், முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 14 இந்திய கல்வி நிறுவனங்கள் க்யூ.எஸ்., குளோபல் எம்.பி.ஏ., ரேங்கிங் - 2025 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் ஸ்கூல் ஆப் பிசினஸ் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.