தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தல் கலாசார விழிப்புணர்வு கட்டுரை, வினாடி - வினா போட்டி

தேர்தல் கலாசார விழிப்புணர்வு கட்டுரை, வினாடி - வினா போட்டி

தேர்தல் கலாசார விழிப்புணர்வு கட்டுரை, வினாடி - வினா போட்டி


UPDATED : நவ 24, 2026 11:34 AM

ADDED : நவ 24, 2026 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:34 AM ADDED : நவ 24, 2026 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் கல்வியறிவு மன்றங்கள் மூலம், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் வினாடி - வினா போட்டி நடந்தது.

மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற, 20 மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் செயல்படும் தேர்தல் கல்வியறிவு மன்றங்கள் மூலமாக எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வும், பங்கேற்பும் கொண்ட தேர்தல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லுாரி நிறுவனங்கள் அளவில், சட்டசபை தொகுதி மற்றும் மாவட்ட அளவில் என மூன்று நிலைகளில் கட்டுரை போட்டி மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இருநிலைகளில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் தற்போது நடத்தப்பட்டது. இதில் சட்டசபை தொகுதியளவில் வெற்றி பெற்ற, 108 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில் மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில், 10 மாணவ, மாணவியரும், வினாடி - வினா போட்டியில் 10 மாணவ, மாணவியரும் வெற்றி பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவ்வாறு, பேசினார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பழனி, அபிநயா, தனி தாசில்தார் (தேர்தல்) சம்பத், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us