இன்று சென்னை வருகிறார் ராகுல்: மாணவர்களுடன் கலந்துரையாடல்
இன்று சென்னை வருகிறார் ராகுல்: மாணவர்களுடன் கலந்துரையாடல்
UPDATED : அக் 10, 2026 02:29 PM
ADDED : அக் 10, 2026 02:31 PM
சென்னை:
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், இன்று சென்னை வருகிறார். தீவுத்திடலில் நடக்கும் நிகழ்ச்சியில், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
'மாணவர்கள் குரல்' என்ற தலைப்பில், நாடு முழுதும் மாணவர்களை சந்தித்து வரும் ராகுல், மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிகிறார். அதன்படி, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை, மாணவர்களுடன் அவர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்க, இன்று டில்லியில் இருந்து விமானம் வாயிலாக, சென்னைக்கு ராகுல் வருகிறார். விமான நிலையத்தில், காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின், அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், ராகுல் ஆலோசனை நடத்துகிறார்.
காங்., மூத்த தலைவர்கள், முன்னணி நிர்வாகிள், அதில் பங்கேற்கின்றனர். தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அப்போது விவாதிக்கப்படுகிறது. பின், மாலை 05:00 மணிக்கு தீவுத்திடலில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல், அதன்பிறகு, டில்லி திரும்புகிறார்.
