UPDATED : ஜன 13, 2025 12:00 AM
ADDED : ஜன 13, 2025 10:25 AM

சென்னை:
நடப்பு 2024 - 2025ம் ஆண்டு, ஆன்லைன் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கில், என்.ஆர்.ஐ., கோட்டாவின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்த பல மாணவர்களின் ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் உள்ள சில கல்வி ஆலோசனை மையங்களில், நேற்று சோதனை நடத்தினர்.
பல்லாவரம் - ஸ்ரீ சாய் கல்வி அகாடமி, போரூர் - மெட்டா நீட், நுங்கம்பாக்கம் மற்றும் சாலிகிராமம் - ஸ்ரீ சாய் கேரியர் நெக்ஸ்ட் அகாடமி, வேளச்சேரி - சீயோன் கேரியர் சொல்யூஷன்ஸ்.
அண்ணா நகர் - லைப் லிங்க் கல்வி ஆலோசனை மையம், அசோக் நகர் - ஸ்டேடி இந்தியா கல்வி ஆலோசனை மையம், குன்றத்துார் - மாதா மருத்துவக் கல்வி உள்ளிட்ட எட்டு நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், வழக்கு தொடர்பாக 105 ஆவணங்கள், 19 முத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றபட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.