sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ரயில்வே வாரியம் தேர்வு அறிவிப்பு

/

ரயில்வே வாரியம் தேர்வு அறிவிப்பு

ரயில்வே வாரியம் தேர்வு அறிவிப்பு

ரயில்வே வாரியம் தேர்வு அறிவிப்பு


UPDATED : அக் 24, 2025 08:22 AM

ADDED : அக் 24, 2025 08:26 AM

Google News

UPDATED : அக் 24, 2025 08:22 AM ADDED : அக் 24, 2025 08:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ள போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ளும் வகையில் பயிற்சிகளை வேலைவாய்ப்பு அலுவலகம் வழங்குகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கலெக்டர் பவன்குமார் அறிக்கை:


ரயில்வே தேர்வு வாரியத்தால் டிக்கெட் சூப்ரவைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் டிரைன் மேனேஜர், ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் கிளார்க், டிராப்பிக் அசிஸ்டண்ட் ஆகிய பதவிகளுக்கான 2025-ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 5,810 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு குறைந்தபட்சம் 18 முதல் 33 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிமுறைகளின் எஸ்சி, எஸ்டி 5 ஆண்டுகள் , ஓ.பி.சி.,க்கு 3 ஆண்டு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் அல்லாத பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட பல்கலையில் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டதாரிகள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து போட்டித்தேர்வுக்கான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us