'நிப்ட்-டீ' மாணவர்களுக்கு ரயில்வே அதிகாரி பாராட்டு
'நிப்ட்-டீ' மாணவர்களுக்கு ரயில்வே அதிகாரி பாராட்டு
UPDATED : அக் 14, 2025 07:29 AM
ADDED : அக் 14, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
'நிப்ட்-டீ' கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், துாய்மை பாரத இயக்கம் சார்பில், தென்னக ரயில்வேயுடன் இணைந்து திருப்பூர் ரயில்வே வளாகம் துாய்மை செய்யும் பணி, கழிவுப்பொருட்களை கொண்டு தயாரித்த பொருட்கள் கண்காட்சி, சுவர் ஓவியம் வரைதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
'நிப்ட்-டீ' நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. தென்னக ரயில் பயணிகள் நலக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், திருப்பூர் ரயில் நிலைய அதிகாரிகள், கல்லுாரி டீன் சம்பத், முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாணவ, மாணவியரை பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினர்.