தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராஜலட்சுமி இன்ஜி., கல்லுாரி ஏ.ஐ., மாநாடு உலக சாதனை படைத்த மாணவர்கள்

ராஜலட்சுமி இன்ஜி., கல்லுாரி ஏ.ஐ., மாநாடு உலக சாதனை படைத்த மாணவர்கள்

ராஜலட்சுமி இன்ஜி., கல்லுாரி ஏ.ஐ., மாநாடு உலக சாதனை படைத்த மாணவர்கள்


UPDATED : ஜூலை 21, 2026 04:21 PM

ADDED : ஜூலை 21, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 04:21 PM ADDED : ஜூலை 21, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ராஜலட்சுமி இன்ஜி., கல்லுாரியில் நடந்த, ஏ.ஐ., நெக்சஸ் மாநாட்டில், 1,000 ஏ.ஐ., 'பாட்'களை உருவாக்கி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.

சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், கல்லுாரி வளாகத்தில், 'ஏ.ஐ., நெக்சஸ் - 2026' என்ற, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாநாடு நடந்தது.

மாநாட்டை, தமிழக செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் தொடங்கி வைத்தார். ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கம் மேகநாதன், முதல்வர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் அமைச்சர் குமார் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு என்ற, ஏ.ஐ.,யானது, உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், மாணவர்கள், ஏ.ஐ.,யை கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாது, உலகிற்கு தேவையான தீர்வுகளை உருவாக்கும் படைப்பாளர்களாகவும் மாற வேண்டும்.

அதற்கான சிறந்த சூழலை, ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரி உருவாக்கி உள்ளது,” என்றார்.

மாநாட்டில், இரண்டு மணி நேரத்தில், 1,000 மாணவர்கள், ஒரே நேரத்தில், சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன், புத்திசாலித்தனமான செயல்பாடுகள், தகவல் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கு தீர்வு காணும், 1,000 ஏஜென்டிக் ஏ.ஐ., பாட்களை உருவாக்கி, உலக சாதனை படைத்தனர்.

அதற்கான சான்றிதழை, வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அமைப்பிடம் இருந்து, ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் சார்பில், கல்லுாரி முதல்வர் முருகேசன் பெற்றுக் கொண்டார்.

சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற 'ஏ.ஐ., நெக்சஸ் - 2026' நிகழ்வில், உலக சாதனை அறிவிப்பு மற்றும் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் உள்ளிட்டோர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us