UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 08:49 AM
சென்னை:
சர்வதேச அளவில் ஆன்லைனில் நடந்த மருத்துவ அறிவியல் சார்ந்த வினாடி - வினா போட்டியில், ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டு குழுக்கள், முதல் இரண்டு இடங்களை பெற்றன.
நிச்சி-இன் சென்டர் அமைப்பு கருத்தரிப்பு மருத்துவம் சார்ந்த மாநாடு ஒன்றை, கடந்த மாதம் ஆன்லைனில் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, மீளுருவாக்க மருத்துவத்தில் ஸ்டெம் செல்கள், நோய் எதிர்ப்பு சக்தி, புற்றுநோய் உயிரியல் ஆகிய தலைப்புகளில், வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மருத்துவ அறிவியல் சார்ந்த போட்டியில், 24 நாடுகளை சேர்ந்த, 186 கல்வி நிறுவனங்களில் இருந்து, 3,510 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உயிரி மருத்துவ அறிவியல் துறை மாணவர்கள் 16 பேர் பங்கேற்று, முதல் இரண்டு இடங்களை பெற்றனர். எஸ்.ஆர்.ஜைனா, வி.சாய்கணேஷ் குழு முதலிடம் மற்றும் சாய் ரேணுகா, சஞ்சனா ராம் குழு இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.