யங் இந்தியன்ஸ் அமைப்புடன் ராமகிருஷ்ணா கல்லுாரி புரிந்துணர்வு
யங் இந்தியன்ஸ் அமைப்புடன் ராமகிருஷ்ணா கல்லுாரி புரிந்துணர்வு
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 10:31 AM
கோவை:
நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும், இந்திய தொழில் கூட்டமைப்பின் யங் இந்தியன்ஸ் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, யங் இந்தியன்ஸ் அமைப்பின் நிர்வாகி விஷ்ணு ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், யங் இந்தியன்ஸ் அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளில் ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்க ஆலோசனைகளும் வழங்கப்படும். கல்வி சார் திட்டங்கள், நிகழ்ச்சிகள், பயிற்சிகள் வழங்க வழிவகை செய்யப்படும்.
மாணவர்களின் ஆராய்ச்சிக்குத் தேவையான தரவுகள், அறிவுசார் சொத்துரிமை, பதிப்புரிமை, காப்புரிமை, வர்த்தக உரிமை போன்றவற்றை பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நிகழ்வில், ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், யங் இந்தியன்ஸ் அமைப்பின் நிர்வாகி ஜெய்சூர்யா ஆகியோர் உடனிருந்தனர்.