தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


UPDATED : செப் 21, 2026 04:34 PM

ADDED : செப் 21, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 04:34 PM ADDED : செப் 21, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.நகர்:
ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, தி.நகர் ராமகிருஷ்ண மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று, தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புரவலரான, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி செட்டியார், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் செயலர் சுவாமி பத்மஸ்தானந்தாஜி ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற 11 ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் ஆற்றிய சேவை மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில், இந்த கவுரவம் வழங்கப்பட்டது.

சிறப்பான தொழில் முறை சாதனைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை ஆற்றிய மூன்று முன்னாள் மாணவர்களுக்கு, 'சிறந்த முன்னாள் மாணவர்' விருது வழங்கப்பட்டது.

இதில், 1954ல் 10ம் வகுப்பு பயின்ற மேஜர் ஜெனரல் வெங்கடராமன், 1974ல் பள்ளி படிப்பை நிறைவு செய்த பாரதியாரின் கொள்ளு பேரன் ராஜ்குமார் பாரதி, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாஸ்கர் ராஜு ஆகியோருக்கும், விருது வழங்கப்பட்டது.

விழாவில் சுவாமி பத்மஸ்தானந்தாஜி பேசியதாவது:

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது, வெறும் ஒன்றுகூடல் மட்டுமல்ல. வாழ்க்கையின் வளர்ச்சி பருவங்களில், நம்மை வழிநடத்திய மதிப்புகள் மற்றும் கொள்கைகளை நினைவுகூரும் வாய்ப்பாகும்.

ஒரு கல்வி நிறுவனத்தின் உண்மையான வெற்றி, அதன் மாணவ, மாணவியரின் வாழ்க்கையிலும், அவர்கள் சமூகத்திற்கு ஆற்றும் சேவையிலும் பிரதிபலிக்கிறது.

முன்னாள் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்றுகூடி, ராமகிருஷ்ண மிஷன் போதிக்கும் சேவை, ஒழுக்கம், கருணை ஆகியவற்றை தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதைக் காண்பதில் மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாக குழு தலைவர் சீதாராமன், துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலர் சந்திரசேகர், பொருளாளர் கேதார்நாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us