UPDATED : டிச 22, 2024 12:00 AM
ADDED : டிச 22, 2024 10:38 AM

குவைத்:
ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு காவியங்களையும் மொழிபெயர்த்தவர் அப்துல்லா பாரோன். இதனை அச்சிட்டவர் அப்துல்லத்தீப் அல்னிசெப்.
அப்துல்லத்தீப் அல்னிசெப் கூறுகையில், இந்த இரண்டையும் அரபி மொழியில் மொழிபெயர்க்க இரண்டு ஆண்டுகள் ஆனது, என்றார். அப்துல்லா பாரோன் கூறுகையில், இந்த இரண்டு புத்தகங்கள் மூலம் இந்திய கலாசாரத்தை தெரிந்து கொள்ள முடிகிறது, என்றார்.
குவைத் சென்ற பிரதமர் மோடியை, அப்துல்லத்தீப் அல்னிசெப், அப்துல்லா பாரோன் இரண்டு பேரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதன் பிறகு அப்துல்லத்தீப் அல்னிசெப் கூறியதாவது: பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெருமையாக உள்ளது. புத்தகத்தை பார்த்து பிரதமர் மகிழ்ச்சி அடைந்தார். அவை மிகவும் முக்கியமானவை. அந்த புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார் என்றார்.