தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலையடிவார ஏழைகளின் கல்விக் கண் திறந்த ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

மலையடிவார ஏழைகளின் கல்விக் கண் திறந்த ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

மலையடிவார ஏழைகளின் கல்விக் கண் திறந்த ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி


UPDATED : நவ 01, 2026 01:59 PM

ADDED : நவ 01, 2026 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 01:59 PM ADDED : நவ 01, 2026 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மிகவும் பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். மலையடிவார ஏழை மக்களின் கல்விக் கண் திறந்த பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது.

இந்த பள்ளி கடந்த 1936ம் ஆண்டு துவக்கப் பள்ளியாக துவங்கப்பட்டது. குறைந்த மாணவர்களுடன் உருவான இப்பள்ளியில் நாளடைவில் அதிக மாணவர்களை கொண்ட பள்ளியாக உருவானது.

துவக்கப்பள்ளிப் படிப்பை முடித்து 6ம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் புதுப்பட்டு அல்லது தேவபாண்டலம், சங்கராபுரம் என வெகுதுாரம் சென்று படிக்கும் நிலை இருந்து வந்தது.

அப்பகுதி மக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த 2000 ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 8ம் வகுப்புவரை மாணவ, மாணவிகள் தங்கு தடையின்றி இப்பள்ளியில் படித்து இப்பள்ளிக்கு எண்ணற்ற பெருமையை சேர்த்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படித்த பெரும்பாலானோர் கல்வித்துறை, காவல் துறை, பொறியியல் துறை, மருத்துவத் துறை, ராணுவம் மற்றும் அரசியலிலும் ஜொலித்து வருகின்றனர். உட்கிராமத்தில் உள்ள இப்பள்ளியில் மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு பயிற்சிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டு கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மனப்பாடப் ஒப்பித்தல், திருக்குறள் ஒப்பித்தல் என அனைத்து போட்டியிலும் பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றனர். 90 ஆண்டுகளைக் கடந்த இப்பள்ளியில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் மலையடிவார ஏழை மக்களின் கல்விக் கண் திறந்த பள்ளியாக ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி திகழ்கிறது.

பேட்டி...
பெற்றோர்களின் ஒத்துழைப்பால் பள்ளி நல்வழியில் செல்கிறது


இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுவதற்கு பாக்கியமாக கருதுகிறனே். மலையடிவாரத்தில் அமைந்திருந்தாலும் இப்பள்ளியில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்கள் இவர்களின் ஒற்றுமையே பள்ளியில் உள்ள மாணவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்காக விளங்குகிறது.

இப்பகுதியில் உள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து பள்ளியை நல்வழியில் எடுத்துச் செல்ல பெரிதும் உதவுகின்றனர். பள்ளியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இப்பள்ளியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வழி வகுத்து தருகின்றனர்.

- மலர்கொடி, தலைமை ஆசிரியர்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us