தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூலை 7ம் தேதி கவுன்சிலிங் தொடக்கம்!

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூலை 7ம் தேதி கவுன்சிலிங் தொடக்கம்!

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூலை 7ம் தேதி கவுன்சிலிங் தொடக்கம்!


UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM

ADDED : ஜூன் 27, 2025 02:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM ADDED : ஜூன் 27, 2025 02:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பொறியியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை, அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டார். ஜூலை 7ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை அண்ணா பல்கலையின் கீழ், 463 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. 2025 - 26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்தது. இதில், 3 லட்சத்து 2,374 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 2 லட்சத்து 49,883 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்; 2 லட்சத்து 26,359 மாணவர்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 27) பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஜூலை 14ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 17ம் தேதி முடிவடைகிறது.

* சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

* துணைப் பிரிவு கவுன்சிலிங் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடக்கிறது.

தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:



200க்கு 200 என்ற கட் ஆப் எடுத்த மாணவர்கள் 145 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் https://www.tneaonline.org/ என்று இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதலிடம்


மாநில அளவில் தரவரிசை பட்டியலில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா 2ம் இடம் பிடித்துள்ளார். பொதுப்பிரிவு தரவரிசை பட்டியலில் அமலன் ஆன்டோ என்பவர் 3ம் இடம் பிடித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us