UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:40 AM
மும்பை:
அரசு பத்திரங்களில் சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி, புதிதாக மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுவரை சில்லரை முதலீட்டாளர்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே முதலீடு செய்வதற்கு வழி இருந்தது. ஆனால் இனி, இந்த புதிய செயலி வாயிலாகவும் இணைய முடியும். இச்செயலியை, கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும், பல்வேறு ஒழுங்குமுறை ஒப்புதல்களை எளிதாக பெறும் நோக்கில், 'பிரவாஹா' என்ற இணையதளத்தையும், ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்து உள்ளது. இத்தளத்தில், 60 ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை துறைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன், இந்திய நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்த தெளிவான புரிதலுக்காக, அவற்றுக்கான தரவு சேமிப்பு மையம் ஒன்றையும், ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.