தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயங்கரவாதம் தங்கள் நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணருங்கள்: துணை ஜனாதிபதி

பயங்கரவாதம் தங்கள் நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணருங்கள்: துணை ஜனாதிபதி

பயங்கரவாதம் தங்கள் நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணருங்கள்: துணை ஜனாதிபதி


UPDATED : அக் 13, 2026 10:24 PM

ADDED : அக் 13, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 10:24 PM ADDED : அக் 13, 2026 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
“பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகள், இறுதியில் அதே பயங்கரவாதம் தங்கள் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும்,” என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

டில்லியில் அமைந்துள்ள தேசிய ராணுவக் கல்லுாரியில் நடந்த, 66வது பயிற்சி வகுப்பை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:


பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் தலைவர்கள், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் நீண்ட கால விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகள், எதிர்காலத்தில் அதே பயங்கரவாதம் தங்கள் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும்.

பயங்கரவாதம் என்பது சட்டவிரோத ஆயுதம். அதை நாம் பயன்படுத்தும் போது, மற்ற நாடுகளை அந்த ஆயுதத்தால் தாக்குவது போல தெரியும். ஆனால், அதே ஆயுதம், அதை பயன்படுத்தியவரை நோக்கி திரும்பும். இதை உலக நாடுகளின் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் சுயமரியாதை உண்டு. நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். எந்த நாடும் பிற நாடுகளின் எல்லைகளை ஆக்கிரமிக்கக் கூடாது.

பாதுகாப்பான உள்நாட்டுச் சூழலைப் பேணுதல், தேசிய ஒற்றுமை மற்றும் வளர்ச்சியைப் பாதுகாத்தல், நாட்டின் நிலப்பரப்பு, வான்வெளி மற்றும் கடல்சார் நலன்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் ஆகியவை, நம் நாட்டின் நோக்கங்களில் முக்கியமானவை.

நம் நாட்டின் இணையவெளியை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் சர்வதேச ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மற்ற நாடுகளுடன் ஆக்கபூர்வமான உறவை வலுப்படுத்த வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்துக்கு தேசிய பாதுகாப்பு அவசியம். நம் நாடு பாதுகாப்பான முறையில் வளர்ச்சியடையவும், செழிக்கவும், லட்சியங்களை அடையவும், அதற்கேற்ற ஒரு சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம்.

உலகின் மிக வலிமையான நாடாக நாம் மாற வேண்டும் என்ற நம் லட்சியம், மற்ற நாடுகளுக்கு நிபந்தனைகளை விதிப்பதற்காக அல்ல; யாரும் நம் நாட்டின் மீது நெறிமுறையற்ற நிபந்தனைகளை திணிக்க முடியாது என்பதை உறுதி செய்வதற்காகத் தான். வளரும் நாடுகளில் மிகப்பெரிய பிரச்னையாக ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழலை நாம் ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us