தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இணையம் உருவாக்க பரிந்துரை

ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இணையம் உருவாக்க பரிந்துரை

ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இணையம் உருவாக்க பரிந்துரை


UPDATED : செப் 10, 2024 12:00 AM

ADDED : செப் 10, 2024 08:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2024 12:00 AM ADDED : செப் 10, 2024 08:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பழங்குடியின பிரிவான, காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் கோரி, திருவண்ணாமலையில் வசிக்கும் மகாலட்சுமி என்பவர் விண்ணப்பித்தார்.

தந்தை, சகோதரி ஆகியோர், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், அதே ஜாதி சான்றிதழ் பெற்றதற்கான ஆதாரங்களையும் சமர்பித்தார். இருந்தும், மகாலட்சுமி கோரிய, ஜாதி சான்றிதழ் வழங்க, வருவாய் கோட்ட அதிகாரி மறுத்தார்.

இதனால், உயர் நீதிமன்றத்தில் மகாலட்சுமி தொடர்ந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகளின் உத்தரவு:


கல்வி மற்றும் வேலைவாய்ப்பை, விளிம்பு நிலை சமூகத்தினர் அணுகவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், ஜாதி சான்றிதழ் தேவை. இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரரின் தந்தையும், சகோதரியும், காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். எனவே, மனுதாரரின் வழக்கு நியாயமானதாகவே தோன்றுகிறது.

மேல்முறையீட்டை ஓராண்டுக்கு பின் கலெக்டர் நிராகரித்துள்ளார்; ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரியை அணுகும்படி உத்தரவிட்டு உள்ளார்.

இதுபோன்ற விண்ணப்பங்களை சரிபார்த்து, ஜாதி சான்றிதழ் வழங்க, மத்திய அளவில் ஆன்லைன் தளத்தை ஏற்படுத்த வேண்டும். ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கவும், அவற்றை சரிபார்த்து வழங்கவும், பொது இணையத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

சொந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்கும்படி கூறாமல், தான் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள அதிகாரியிடம் விண்ணப்பிக்க ஏதுவாக, இந்த வசதியை விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மேலும், விண்ணப்பித்தவரின் ஜாதியை சரிபார்க்கும் விதமாக, வேறு மாவட்டத்தில் அவரது பெற்றோர் வசித்தாலும், அதையும் சரிபார்க்கும் வசதி இணையத்தில் இருக்க வேண்டும்.

ஜாதி சான்றிதழ் சரிபார்த்து வழங்கும் நடைமுறைக்கு, கால அட்டவணை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் தேவையின்றி தாமதம் ஏற்படாது. இந்த பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து, அரசிடம் கருத்து பெற்று தெரிவிக்க, அரசு பிளீடர் அவகாசம் கோரியுள்ளார். விசாரணை, வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us