UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM
ADDED : ஜூன் 19, 2024 09:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி :
பொள்ளாச்சி, திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், ஆசிரியர் திறன் மேம்பாட்டு மையம் சார்பில், பேராசிரியர்களுக்கான புத்தாக்க மற்றும் செயலாக்க பயிற்சி முகாம் நடந்தது.
மைய இயக்குநர் ராமச்சந்திரன், அனைவரையும் வரவேற்றார். முகாமை கல்லுாரிச் செயலாளர் விஜயமோகன் துவக்கி வைத்தார்.
பங்கேற்ற பேராசியர்களுக்கு கற்றல் மற்றும் கற்பிப்பதில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில் ஆசிரியர்களின் பங்கு, செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் வனிதாமணி, முதன்மை இயக்குனர் நந்தகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.