பள்ளியில் ஆசிரியருக்கு எதிர்ப்பு மாணவர்களை அனுப்ப மறுப்பு
பள்ளியில் ஆசிரியருக்கு எதிர்ப்பு மாணவர்களை அனுப்ப மறுப்பு
UPDATED : ஜூலை 17, 2025 12:00 AM
ADDED : ஜூலை 17, 2025 08:47 AM
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஏற்கனவே புகாரில் சிக்கி இடமாற்றத்தில் வந்த ஆங்கில ஆசிரியர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தனர்.
முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சரவணன் பணியாற்றினார். இவர் ஜனவரியில் மாணவிகளிடம் தவறான முறையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் சரவணனை திருவாடனை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்தனர்.
அங்கு மாணவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து கமுதி அருகே கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றப்பட்டார். நேற்று இப்பளிக்கு வந்த அவருக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பெற்றோரிடம் பள்ளி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர் சரவணனை இங்கு அனுமதிக்க கூடாது. மீறினால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம்' எனவும் ஒருசில பெற்றோர் பாதியிலேயே அவர்களை அழைத்துச் சென்றனர். இப்பிரச்னையில் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.