தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி நிதியை விடுவியுங்கள்: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கல்வி நிதியை விடுவியுங்கள்: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கல்வி நிதியை விடுவியுங்கள்: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்


UPDATED : நவ 30, 2025 08:59 AM

ADDED : நவ 30, 2025 09:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2025 08:59 AM ADDED : நவ 30, 2025 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
3548.22 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா கல்வி திட்டத்தின் நிதியை விடுவிக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று (நவ.29) திமுக எம்பிக்கள் கூட்டம் நடந்தது. பார்லி கூட்டத்தொடர் டிச.1ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, ஆலோசனைகள் நடந்தது. கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன் விபரம் பின்வருமாறு:

* மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜ அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழகத்தை புறக்கணிப்பதாக கூறி, மத்திய பாஜ அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* பிரதமர் மோடி நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

* கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தர வலியுறுத்தி தீர்மானம்.

* கருணாநிதி பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவும், கவர்னருக்கு கால நிர்ணயம் செய்யவும் பார்லியில் குரல் எழுப்ப வலியுறுத்தி தீர்மானம்.

* செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.

* நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி தீர்மானம்.

* 3548.22 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா கல்வி திட்டத்தின் நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

* மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தி தீர்மானம்.

* இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம் என வலியுறுத்தி தீர்மானம்.

* பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம்.

* கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி தீர்மானம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us