தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு

போட்டி தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு

போட்டி தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு


UPDATED : செப் 19, 2026 03:05 PM

ADDED : செப் 19, 2026 03:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 03:05 PM ADDED : செப் 19, 2026 03:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
யு.ஜி.சி., நெட், ஜே.இ.இ., மெயின், கியூட் முதுகலை தேர்வு உள்ளிட்ட 14 போட்டித் தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணையை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

'நீட்' எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.டி., கல்வி நிலையங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் முதல் 2027, மார்ச் வரையிலான 14 போட்டித் தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணையை அந்த அமைப்பு வெளியிட்டது.

இதன்படி, இன்ஜினியரிங் சேர்க்கைக்கான ஜே.இ.இ., மெயின் தேர்வின் முதற்கட்டம், 2027, ஜனவரி 22 முதல் 24ம் தேதியும், 28 முதல் 30ம் தேதி வரையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, ஜனவரி 31ம் தேதி, மாற்றுத் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மற்றும் கல்லுாரிகளில் ஆராய்ச்சி படிப்புகளுக்காக நடத்தப்படும் யு.ஜி.சி., நெட் தேர்வு, வரும் டிசம்பர் 14 முதல் 19ம் தேதி வரை நடைபெறும். இதற்கு மாற்றுத் தேதியாக, டிச., 20, 21 ஆகிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டின் முன்னணி வணிக மேலாண்மை கல்லுாரிகளில் சேர்வதற்கான 'சி மேட்' எனப்படும் பொது மேலாண்மை சேர்க்கை தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும்.

நம் நாட்டில் உள்ள மத்திய பல்கலைகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கியூட் பி.ஜி., நுழைவுத் தேர்வு, அடுத்த ஆண்டு மார்ச் 1 முதல் 5ம் தேதி வரையும், அதன் தொடர்ச்சியாக மார்ச் 8, 12 முதல் 20ம் தேதி வரை, மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளன. இதற்கு மாற்றாக, அடுத்த ஆண்டு, மார்ச் 30, 31 ஆகிய தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, ராணுவ பயிற்சிப் பள்ளி தேர்வும், இந்திய ராணுவ கல்லுாரி தேர்வு, தேசிய பேஷன் டெக்னாலஜி நுழைவுத்தேர்வு ஆகியவற்றுக்கும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us