தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு தீர்வு: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்

இன்ஜி., கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு தீர்வு: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்

இன்ஜி., கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு தீர்வு: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்


UPDATED : ஜூன் 22, 2026 10:36 AM

ADDED : ஜூன் 22, 2026 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2026 10:36 AM ADDED : ஜூன் 22, 2026 10:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில் 'இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி' நிகழ்ச்சி நடந்தது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்காக, தினமலர் நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, 'தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்தின. ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியை, கற்பகம் உயர்கல்வி நிறுவனம் கோ-ஸ்பான்சராக இணைந்து வழங்கியது.

ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மகேஸ்வரி, கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் டீன் பாலாஜி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஆதி பாண்டியன், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். கவுன்சிலிங் நடைமுறைகளை தெரிந்துகொள்ள மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மகேஸ்வரி பேசுகையில், 'எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், அடிப்படை பொறியியல் அறிவுடன் நவீன தொழில்நுட்பத் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். செமிகண்டக்டர், பாதுகாப்புத் துறை, பசுமை மற்றும் தூய்மை ஆற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங், விண்வெளித் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் உள்ளிட்ட துறைகளில் அதிக வாய்ப்புகள் உள்ளன,' என்றார்.

கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் டீன் பாலாஜி, 'நண்பர்கள் அல்லது உறவினர்களின் ஆலோசனைகளை மட்டும் நம்பாமல், தங்களது ஆர்வம், திறன் மற்றும் எதிர்கால தொழில்துறை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தி, சிறந்த பணிவாய்ப்புகளை உருவாக்கித் தரும் கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது அவசியம்,' என்றார்.

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முதல் கல்லூரி சேர்க்கை வரை தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை கவுன்சிலிங் குறித்த முழுமையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மாணவர்களின் கட்- ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரிகளைத் தேர்வு செய்வது, வளர்ந்து வரும் தொழில்துறை வாய்ப்புகள், அதிக வேலைவாய்ப்பு கொண்ட படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிபுணர்கள் விளக்கமளித்தனர். பொறியியல் கவுன்சிலிங் தொடர்பாக சந்தேகங்கள், குழப்பங்களுக்கு ஒரே இடத்தில் தெளிவான பதில்கள் கிடைத்ததாக பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குழப்பம் தீர்ந்தது


பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தாலும், அடுத்தகட்ட நடைமுறைகள் குறித்து குழப்பமாக இருந்தது. www.tneaonline.org இணையதளத்தை பற்றி விவரித்தனர். கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை செயல்முறைகள் சந்தேகங்கள் தீர்ந்ததால், நம்பிக்கையாக உள்ளேன்.
- நிகிதா ஸ்ரீ.

வாய்ப்புகள் அறிந்தேன்

நான் தேர்வு செய்துள்ள பேஷன் டெக்னாலஜி படிப்பின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து நிபுணர்களிடம் நேரடியாக விளக்கம் பெற்றேன். கட் - ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லூரி, படிப்பை தேர்ந்தெடுப்பது குறித்தும் அறிந்து கொண்டேன்.
- பிரீத்தி.

பயனுள்ள தகவல்கள்

பொறியியல் படிக்க விரும்பும் என் மகன்களுக்காக இந்நிகழ்வில் பங்கேற்றேன். சிறந்த கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்வது, மாறிவரும் தொழில்துறை, அதற்கேற்ப வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.
- புவனேஸ்வரி.

நம்பக தகவல்கள்


இணையதளம், சமூக ஊடகங்களில் கிடைக்கும் தகவல்களை விட இந்நிகழ்வில் நிபுணர்களின் நேரடி விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. கவுன்சிலிங் விருப்பத் தேர்வில் மாணவர்கள் எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என புரிந்தது.
- நிசார் அஹமத், குனியமுத்தூர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us