UPDATED : டிச 17, 2024 12:00 AM
ADDED : டிச 17, 2024 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :
புதுச்சேரி ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., சந்திரன் எழுதிய ஆழ் மன எண்ணங்களும், பிரபஞ்சமும் என்ற மனித வள மேம்பாட்டு நுால் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, நுாலை வெளியிட முதல் பிரதியை நுாலாசிரியரின் தாயார் தவமணி ஜோதிலிங்கம் பெற்றுக் கொண்டார்.
டாக்டர் பார்த்திபன், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் மக்கள் சேவை மையத் தலைவர் சசிகுமார், ஓய்வு பெற்ற போலீஸ் நலச்சங்க பொதுச்செயலாளர் இளங்கோவன், கலியபெருமாள், அரிமதி இளம்பரிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நுாலாசிரியர் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., சந்திரன் ஏற்புரை வழங்கினார்.