கோழிப்பண்ணைக்கு தண்ணீர் திருட்டு ஓய்வு ஆசிரியருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்
கோழிப்பண்ணைக்கு தண்ணீர் திருட்டு ஓய்வு ஆசிரியருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்
UPDATED : ஜூன் 24, 2025 12:00 AM
ADDED : ஜூன் 24, 2025 08:52 AM
மல்லசமுத்திரம்:
ஆத்துமேடு பகுதியில் இலவச விவசாய மின் இணைப்பு மூலம் கோழிப்பண்ணைக்கு தண்ணீர் திருடிய ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மல்லசமுத்திரம் புறநகர் பகுதிக்குட்பட்ட ஆத்துமேடு பகுதியில், இலவச விவசாய மின் இணைப்பு மூலம், விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கோழிப்பண்ணைக்கு வினியோகம் செய்வதாக, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று, நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக பொதுநிலை மதிப்பீட்டு அலுவலர் பழனிசாமி தலைமையில், ஆத்துமேடு பகுதியில் ஆய்வு செய்தனர்.
அதில், அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சண்முகம் என்பவர், அவரது விவசாய தோட்டத்தில் உள்ள இலவச விவசாய மின் இணைப்பு மூலம், கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி டிராக்டரில் ஏற்றி, பாலமேடு பகுதியில் உள்ள அவரது மருமகன் மணியின் கோழிப்பண்ணைக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆசிரியர் சண்முகத்திற்கு, ஒரு லட்சத்து, 20,238 ரூபாய் அபராதம் விதித்தனர். மல்லசமுத்திரம் உதவி செயற்பொறியாளர் அமுதா, இளநிலை பொறியாளர் மதன் உடனிருந்தனர்.