கரடு முரடாக விளையாட்டு மைதானம்; நடுவீரப்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு
கரடு முரடாக விளையாட்டு மைதானம்; நடுவீரப்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு
UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM
ADDED : ஜூலை 11, 2024 09:29 AM
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, நடுவீரப்பட்டு, விலங்கல்பட்டு, குமளங்குளம், பாலுார் உள்ளிட்ட சுற்றுபுற கிராம பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பழமையான இப்பள்ளியில் கடந்த காலங்களில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, ஒன்றிய, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளது. மாநில அளவிலான போட்டிகளிலும் இப்பள்ளி சாதித்துள்ளது.
ஆனால், விளையாட்டு மைதானத்தின் சீர்கேட்டால், மாணவர்கள் விளையாட்டில் தற்போது ஆர்வம் செலுத்த முடியாமல் முடங்கியுள்ளனர்.விளையாட்டு திடல் பராமரிப்பின்றி, கூழாங்கற்கள் குவாரியாக மாறியுள்ளதால், இங்கு விளையாடும் மாணவர்களுக்கு கால்களில் காயம் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில், பல பள்ளிகளில் விளையாட்டு திடல் இருப்பதில்லை.
ஆனால் இந்த பள்ளிக்கு விஸ்தாரமான விளையாட்டு திடல் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலை வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விளையாட்டு திடலை சரி செய்து, மாணவர்களை விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்.