விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்
விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்
UPDATED : அக் 03, 2025 10:43 AM
ADDED : அக் 03, 2025 10:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மேட்டூர், சாம்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் ஸ்ரீநாத், 16, உயிரிழந்தார்.
இதனால் நேற்று மாலை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி ஆகியோர், மாணவரின் பெற்றோரான, ரயில்வே ஊழியர் திருமூர்த்தி - கோமதி தம்பதியிடம், தமிழக அரசு இழப்பீடு தொகையாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.