UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 09:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:
வேலுார் மாவட்டம், பென்னாத்துாரைச் சேர்ந்தவர் சுதர்சன், 33; வேலப்பாடியில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வாழியூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை சாந்தியின் மகன், இவரிடம் நீட் பயிற்சியில் சேர்ந்தார். புதுச்சேரியில், தனியார் மருத்துவ கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாக, 31.51 லட்சம் ரூபாய் வாங்கி சுதர்சன் மோசடி செய்துள்ளார். வேலுார் போலீசார், சுதர்சனை கைது செய்தனர்.