தொழிற்கல்வி மாணவர்களுக்குரூ.50,000 கல்வி உதவி தொகை
தொழிற்கல்வி மாணவர்களுக்குரூ.50,000 கல்வி உதவி தொகை
UPDATED : மார் 12, 2025 12:00 AM
ADDED : மார் 12, 2025 10:53 AM
சிவகங்கை:
தொழிற்கல்வி, மருத்துவம், வேளாண்மை, சட்ட படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
இன்ஜி., மருத்துவம், பல், கால்நடை மருத்துவம், வேளாண்மை, சட்டம் படிக்கும் வறுமை நிலையில் உள்ள குடும்ப மாணவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து படிக்கும் காலத்தில் ஒரு முறை கல்வி உதவி தொகையாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது.
கவுன்சிலிங் மூலம் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இச்சலுகை. மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீடின்றி, அரசு நடத்திய கவுன்சிலிங் மூலம் சேர்ந்திருக்க வேண்டும். இருப்பிட சான்று, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருத்தல் வேண்டும். முதல் பட்டதாரி கட்டண சலுகை, 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்ந்தவர் உள்ளிட்டோர் பயன்பெற முடியாது.
கல்வி உதவி தொகை பெற விரும்புவோர் பிளஸ் 2 மதிப்பெண், குடியிருப்பு, வருவாய், பிறப்பிட சான்று, கவுன்சிலிங் ஆவண நகல், குடும்ப உறுப்பினர் வயது, கல்வி, வருவாயுடன் தங்களது விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் சமர்பித்து பயன்பெறலாம்.