UPDATED : அக் 11, 2024 12:00 AM
ADDED : அக் 11, 2024 11:15 AM
திருப்பூர் :
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், மாணவ, மாணவியர் 67 பேருக்கு, ரூ.2.63 கோடி கல்விக்கடன் அனுமதி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், கல்விக்கடன் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில கடன் ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஷ், முன்னோடி வங்கி மேலாளர் துர்க பிரசாத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் என, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோருடன் முகாமில் பங்கேற்றனர்.
22 வங்கிகளை சேர்ந்த அலுவலர்கள், மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை பரிசீலித்தனர். மொத்தம் 300 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், உடனடியாக 67 பேருக்கு, ரூ.2.63 கோடி கல்விக்கடன் அனுமதி வழங்கப்பட்டது.
வித்யாலட்சுமி மற்றும் ஜன்சமர்த் இணையதளங்கள்வாயிலாக கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்; கல்விக்கடன் பெற மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கம்அளிக்கப்பட்டது.