ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் வழங்க முகாம்
ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் வழங்க முகாம்
UPDATED : அக் 07, 2025 07:40 AM
ADDED : அக் 07, 2025 07:41 AM
கோவை:
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.) இட ஒதுக்கீட்டின் கீழ், 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல் வழங்கும் சிறப்பு பயிற்சி கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார்.
மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் செயல்படும், தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும்போது, பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் விளக்கப்பட்டன.
விண்ணப்பங்களை சரிபார்ப்பது, மாணவர்களின் தகவல்களை உறுதி செய்வது, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் மாணவர்களின் விபரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து விளக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) புனிதா அந்தோணியம்மாள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மேலாண்மை தகவல் மைய ஒருங்கிணைப்பாளர்கள், ஆர்.டி.இ. ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். தனியார் பள்ளி முதல்வர்களுடன், மாவட்ட கல்வி அதிகாரி (தனியார்) ஆர்.டி.இ. சேர்க்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.