UPDATED : ஜூன் 26, 2024 12:00 AM
ADDED : ஜூன் 26, 2024 10:06 AM
சென்னை:
ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி படிக்கும் வாய்ப்புகளை பற்றிய கல்விக் கண்காட்சி சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவித மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலையில் சேர்வதற்கு சீஇடி, ஐஇஎல்டிஎஸ் போன்ற மொழிப்புலமை சான்றிதழ் தேவையில்லை. ரஷ்ய அரசு 200 மாணவர்களுக்கு 100 சதவீத உதவித்தொகை வழங்குகிறது.
இந்த கல்வியாண்டில் ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்கு 8000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி சென்னை மற்றும் மதுரையில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று (ஜூன் 26) திருச்சியிலும், நாளை (ஜூன் 27) சேலத்திலும், நாளை மறுநாள் (ஜூன் 28) கோவையிலும் நடக்க உள்ளது.
கூடுதல் விவரங்கள், ஸ்பாட் அட்மிஷன்களுக்கு அகில இந்திய ரஷ்யக் கல்வி கண்காட்சியில் பங்கேற்கலாம். இக்கண்காட்சி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 9282 221 221 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.